வத்திராயிருப்பு: பூலோக கயிலை என அழைக்கப்படும் மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவிற்காக மலையிலும், மலை அடிவாரம் சுற்றிய தோப்புகள், வயல்களிலும் கூடாரம் அமைத்து தங்கினர். மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்களில் பிரதோஷ வழிபாட்டுடன் அமாவாசை விழா துவங்கியது. அமாவாசையான இன்று சுந்தரமகாலிங்கசுவாமி நாகாபரண அலங்காரம், சந்தன மகாலிங்கசுவாமி ராஜ அலங்காரம், சுந்தரமூர்த்தி சுவாமி புஷ்ப அலங்காம் செய்யப்பட்டு் சிறப்பு பூஜைகள் நடந்நது.பக்தர்கள் மலை அடிவாரத்தில் ஆடு, கோழிகள் பலியிட்டு அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.