பதிவு செய்த நாள்
04
ஆக
2024
08:08
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், பசுக்களுக்கு தீவனம் மற்றும் சிரமப்படுபவர்களுக்கு உணவு வழங்குவதும் வழக்கம். இன்று (ஆகஸ்ட் 4) ஆடி அமாவாசை என்பதால், ராமேஸ்வரம் கடற்கரையில் மக்கள் குவிந்தனர்.
அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
* மதுரை வைகை ஆற்றில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
* திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையிலும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பேர் தர்ப்பணம் கொடுத்து வழிபடுகின்றனர்.
* திருச்செந்தூர் கோவில் கடற்கரை, திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கன்னியாகுமரி, கோவை நொய்யல் படித்துறை உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமானோர் முன்னோர் வழிபாடு செய்ய கூட்டம் அலைமோதுகிறது.