நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரவிழா ; செப்புத் தேரில் பவனி வந்த அம்பாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2024 01:08
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயில் கோயில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு அம்பாள் செப்புத் தேரில் பவனி வந்து அருள்பாலித்தார்.
காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலையிலும், மாலையிலும் அம்பாள் வீதியுலா நடந்தது. தினமும் சதுர்வேத பாராயணங்களும் நடந்து வருகிறது. விழாவின் 9வது நாளில் அம்பாள் செப்புத் தேரில் பவனி நடந்தது. மதியம் அம்பாள் சிவ பூஜை செய்யும் காட்சி, சப்தாவர்ணம் தந்தப் பல்லக்கில் திருவீதியுலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.