வேப்ப இலை வைத்து சமைத்தாலும் கசக்காது; அம்மன் வழிபாட்டில் ஆடு, சேவல் பலியிட்டு படையல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2024 11:08
மேலுார்; வீரசூடாமணிபட்டியில் நோய், நொடி இல்லாமலும், எல்லா வளமும் கிடைக்க வேண்டியும் அம்மனுக்கு பக்தர்கள் ஆடு, சேவல்களை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வீரசூடாமணிபட்டியில் உள்ள ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு 8 நாட்கள் மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். எட்டாம் நாளான நேற்று நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற கச்சிராயன்பட்டி, வீரசூடாமணி பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் 91 ஆடுகள், 566 சேவல்களை பலியிட்டனர். தொடர்ந்து மண்பானையில் ஆடு, சேவல் கறியை வைத்து, அதன் மேல் வேப்ப இலைகளை வைத்து, உப்பு சேர்க்காமல் அவித்து அம்மனுக்கு படையலிட்டனர். முன்னதாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிராமம் சார்பில் வாங்கிய சர்க்கரையை பால்குடி ஜமாத் தலைவர் அப்துல்காதர் தலைமையில் பாறையில் வைத்து தொழுகை நடத்தி பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர். காணிக்கை கொடுத்தவர்களுக்கு படையிலிட்ட பிரசாதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. வேப்ப இலையை வைத்து சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது என்பது அவர்களின் நம்பிக்கை.