ஆடி செவ்வாய்; கோவை மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2024 01:08
கோவை; ஆடி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை என். எச் .ரோடு - டவுன் ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் செந்நிற வண்ணப் புடவையில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மாகாளியம்மனை தரிசனம் செய்தனர்.