சிவகாசி துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2024 03:08
சிவகாசி; சிவகாசி பஸ் ஸ்டாண்ட் துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு வளையல் அலங்காரம் நடந்தது. காலையில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது பக்தர்கள் கல்யாண வளையல், வளைகாப்பு வளையல், பூ மஞ்சள் கயிறு, மஞ்சள் பொடி, தாழம்பூ, குங்குமம், புடவை, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை மாரியம்மன் கோயிலில் இருந்து சீர் எடுத்து ஊர்வலமாக துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர். புத்திர பாக்கியம், திருமணத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு சிவகாசி விஸ்வநாதர் சுவாமி கோயில், மாரியம்மன், பத்ரகாளியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.