காஞ்சிபுரம்; ஆடி வெள்ளி மற்றும் நாக பஞ்சமியையொட்டி, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில். அரசமரத்தடியில் உள்ள நுாற்றுக்கணக்கான நாக சிலைகளுக்கு இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், நாக பஞ்சமி விரதம் மேற்கொண்ட திருமணமாகாத ஆண்கள், பெண்கள், சுமங்கலி பெண்கள் என, திரளான பக்தர்கள் நாக சிலைகளுக்கு பாலாபிஷேம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்தனர். அரச மரத்தடியில் உள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டனர். இதில், நேர்த்திக்கடனாகவும், பரிகார பூஜையாகவும், சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு உள்ளிட்டவை வழங்கினர்.