பதிவு செய்த நாள்
12
ஆக
2024
11:08
புதுடில்லி; சரோஜினி நகர் சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவிலில் நேற்று காலை மஹன்யாஸ பாராயணம் மற்றும் ஏகாதச ருத்ர ஜபம் நடந்தது. பரசுராம சாஸ்திரிகள் தலைமையில் வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பாராயணம் செய்தனர். காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதைத் தொடர்ந்து சங்கல்பம், புண்யாஹவாசனம் மற்றும் கலச ஸ்தாபனம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மஹன்யாஸ பாராயணம், அதைத் தொடர்ந்து 11 ஆவர்த்தி ஏகாதச ருத்ர ஜபம், சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் மற்றும் ஓங்காரேஸ்வரருக்கு அபிஷேகம், நாமார்ச்சனை, உபசார பூஜைகள் மற்றும் கலச அபிஷேகம் செய்யப்பட்டன. மதியம் 12:30 மணிக்கு கற்பக விநாயகர், அனுமன், நவகிரஹ சன்னதிகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
லட்சார்ச்சனை; செப்., 7ல் கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதையொட்டி வரும் 27ம் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலையில் மூலவர் கற்பக விநாயகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்படுகிறது.