பதிவு செய்த நாள்
17
நவ
2012
09:11
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம், நவ., 18ல் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவின், மூன்றாம் நாள் இரவில், சுவாமிஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி, கிரிப்பிரகார வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இங்கு, கந்தசஷ்டி திருவிழா, நவ.,13ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாநாட்களில், தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி, சூரனை சம்ஹாரம் செய்து, தீமை அழியும் உண்மையை உலகிற்கு உணர்த்தும், சூரசம்ஹாரம், ஆறாம் நாளான, ஞாயிற்றுக்கிழமை மாலை, கோயில் கடற்கரையில் நடக்கிறது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். நவ.,19ம்தேதி சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் கோட்டை மணிகண்டன், இணைஆணையர் சுதர்சன் செய்துள்ளனர்.