பதிவு செய்த நாள்
13
ஆக
2024
11:08
வடமதுரை; வடமதுரை மேற்குரத வீதி முனியாண்டி கோயிலில் ஆடி உற்ஸவ திருவிழா 2 நாள் நடந்தது. பால் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்து பாலாபிஷேகம் செய்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. பொங்கல், ஆடுகளை வெட்டி பொது விருந்தும் வழங்கப்பட்டது.
* கொம்பேரிபட்டி பெரியாற்றங்கரையோரம் சின்னத்தோட்டம் பாப்பாத்தியம்மன், மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோயில் ஆடி உற்ஸவ திருவிழாவில் குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.
* அய்யலுார் ரோட்டுபுதுார் விலங்கு கருப்பணசுவாமி கோயிலில் நடந்த ஆடி உற்ஸவ திருவிழா கணபதி பூஜையுடன் துவங்கி தீர்த்தம் எடுத்தல், பொங்கல் அழைப்பு, பொது விருந்து நடந்தது.