அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருபவித்திர உற்ஸவம்; ஆக.15ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2024 11:08
அழகர்கோவில்; அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிறப்பை முன்னிட்டு திருபவித்திர உற்ஸவம் ஆக.15 முதல் 19 வரை 5 நாட்கள் நடக்க உள்ளது. தினமும் இரவில் உற்ஸவர் புறப்பாடாகி ஆரிய வாசல் பிரகாரம் வழியாக சுந்தரபாண்டியன் மண்டபம் ஆமைதாங்கி மண்டபத்தில் எழுந்தருள்வார். அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். ஆக. 15, முதல் நாள் காலை 9:00 மணிக்கு 108 வெள்ளிக் கலசங்கள் வைத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் மதியம் 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடைபெறும்.