குச்சனூர் சோனை கருப்பசாமிக்கு 2 ஆயிரம் மதுபாட்டில்களுடன் படையல்; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2024 05:08
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திருவிழாவின் ஒரு பகுதியாக இங்குள்ள சோணை கருப்பசாமிக்கு பக்தர்கள் 2 ஆயிரம் மதுபாட்டில்கள், 50 க்கும் மேற்பட்ட ஆடுகள், 100 க்கும் மேற்பட்ட கோழிகளை படைத்து தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற பிரார்த்தனை செய்தனர். குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருத்திருவிழா நடந்து முடிந்தது . இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக இங்குள்ள சோனை கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது . பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் 63 மதுபாட்டில்கள், 50 க்கும் மேற்பட்ட ஆடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட - கோழிகள் படையலாக வைத்து வழிபட்டனர். பின்னர் ஆடு, கோழிகளை பலி கொடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கருப்பசாமி நகர் வலம் வந்தார்.