திருப்பதி பெருமாளுக்கு ரூ. 21 கோடி நன்கொடை அளித்த பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2024 05:08
திருப்பதி; திருமலை திருப்பதியில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதன்படி, பஞ்சாபின் டிரைடென்ட் குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராஜீந்தர் குப்தா ஞாயிற்றுக்கிழமை TTDயின் SV பிரணதன அறக்கட்டளைக்கு ரூ.21 கோடி நன்கொடை அளித்துள்ளார். நன்கொடையாளர் அதே தொகைக்கான காசோலையை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஸ்ரீ சி வெங்கையா சவுத்ரியிடம் திருமலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.