பழநி; பழநி முருகன் கோவில் அறங்காவலர் குழுவின் பதவி காலம் ஜூலை 27ல் நிறைவடைந்தது. கோவில் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள தற்காலிகமாக ஹிந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை கமிஷனர் கார்த்திக், தக்காராக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, அவர் நேற்று பழநி கோவில் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.