வடவள்ளி; வடவள்ளியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணூல் மாற்றும் விழா நடந்தது.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணூல் மாற்றும் விழா வடவள்ளி தாம்ப்ராஸ் ஹாலில் இன்று நடந்தது. இதில் ரிக் உபாகர்மா, யஜுர் உபாகர்மா எனும் பூணூல் மற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கணபதி வாத்தியார், சுரேஷ் சர்மா வாத்தியார், ராம்குமார் வாத்தியார் ஆகியோர், பூணூல் மாற்றுவதற்கான யாகங்களை நடத்தினர். உலக நலன், சமுதாய முன்னேற்றம், குடும்ப வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்காக பிரார்த்தனை செய்து பூணூல் மாற்றப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு பிராமணர் சங்க வடவள்ளி கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில்," ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் அடிப்படையில், பூணூல் மாற்றும் விழா நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி, சாம உபாகர்மா பூணூல் மாற்றும் யாகம் நடத்தப்படும்,"என்றார்.