மூணாறு; மூணாறில் மேல் மருத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் இடுக்கி மாவட்ட குழு சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை, ஆடிபூரம் கஞ்சி கலைய ஊர்வலம் ஆகியவை நடந்தன. இயற்கை சீற்றங்கள் குறையவும், உலகம் அமைதி பெறவும், விவசாயம், தொழில், கல்வி, வர்த்தகம் ஆகியவை வளர்ச்சி பெற பூஜையும், ஊர்வலமும் நடந்தன. பழைய மூணாறில் விநாயகர் கோயிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு ஆன்மிக இயக்கத்தின் மாநில தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊர்வலம் நிறைவு பெற்றது. அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.