ஆவணி அவிட்டம்; லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2024 04:08
புதுச்சேரி; ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. முத்தியால்பேட்டை ராமக்கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஆவணி அவிட்டம் முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.