Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆவணி அவிட்டம்; லட்சுமி ஹயக்ரீவர் ... திருப்போரூர் கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை திருப்போரூர் கெங்கை அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் பக்தர்களை பரவசப்படுத்திய காஞ்சி மஹா பெரியவர் வாழ்க்கை நாடகம்
எழுத்தின் அளவு:
மதுரையில் பக்தர்களை பரவசப்படுத்திய காஞ்சி மஹா பெரியவர் வாழ்க்கை நாடகம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2024
04:08

மதுரை; மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கில், எஸ்.எஸ் இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் சார்பில் காஞ்சி மஹா பெரியவரின் நுாற்றாண்டு கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகம் நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கார்த்திகேயன், ஜி.ஆர்.சுவாமிநாதன் குத்துவிளக்கேற்றி நாடகத்தை துவக்கி வைத்தனர். நாடகத்தை இளங்கோ குமணன் தொகுத்து வழங்கினார். 


மஹா பெரியவரின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தை எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் 2017 முதல் நடத்தி வருகிறது. மஹா பெரியவரின் பள்ளிப் பருவம் துவங்கி கனகாபிஷேகம் வரை முக்கியமான நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகள், சிங்கப்பூர் என மொத்தம் 40 காட்சிகள் அரங்கேறியுள்ளன. மதுரையில் நேற்று 41வது காட்சி அரங்கேறியது.  நாடகத்தில் 13 முதல் 30 வயது மஹா பெரியவராக தீரஜ்மோகன், 40 முதல் 60 வயது பெரியவராக இ.எம்.எஸ்.முரளி, 70 முதல் 100 வயது பெரியவராக வாசுதேவன் சிறப்பாக நடித்தனர். ஜெயந்தி கவுரி ஷங்கர், கார்த்திக், ரங்கபதி உள்ளிட்ட பலர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடித்தனர். இந்து மதத்தின் மேன்மை, கடவுள் வழிபாட்டின் அவசியம், எளிமையின் அருமை, அரசியலில் ஆன்மிகம், கல்வியின் முக்கியத்துவம், மதமாற்றம் பற்றிய தெளிவு, மனித வாழ்வின் சிறப்புகள், பணிவு, மனநிறைவின் முக்கியத்துவம், பணத்தாசையை கட்டுப்படுத்துவது, பிறருக்கு உதவுதல் என மஹா பெரியவரின் பல கருத்துகளை இந்நாடகம் வெளிப்படுத்தியது. நாடகத்திற்கு இசை – மாண்டலின் யு.ராஜேஷ், கலை – தோட்டாதரணி, எழுத்து, இயக்கம் – இளங்கோ குமணன், தயாரிப்பாளர்கள் – முரளிதரன், அனந்தகிருஷ்ணன். மஹா பெரியவரோடு பயணித்த உணர்வை இந்த மூன்று மணி நேர நாடகம் அளித்ததாக பார்வையாளர்கள் கூறினர். இந்நாடகத்தை புத்தக வடிவில் நீதிபதிகள் கார்த்திகேயன், ஜி.ஆர்.சுவாமிநாதன், சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar