கிருஷ்ணன் அலங்காரத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2024 09:08
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு வேணுகோபால சுவாமி அவதாரத்தில் வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் பரவசத்துடன் கோவிந்தா கோஷமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் கிருஷ்ண பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.