தொட்டிலில் கொஞ்சி விளையாடிய கிருஷ்ணர்; நாகர்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2024 09:08
நாகர்கோவில்; நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்புபூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார். தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். சிறப்பு மிக்க இக்கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் தொட்டிலில் கொஞ்சி விளையாடும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.