திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ராஜகோபுரம் நிலைப்படிக்கு வெளியே, சிறிய வரப்பு போன்று அமைத்து, அதற்குள், தண்ணீர் ஒரு இன்ச் அளவுக்கு தேங்கி நின்று, செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குழாய் அமைத்து, நுண்ணீர் பாசனம் போல் தண்ணீர் விழும் வகையில் செய்துள்ளனர். இதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் பாதங்களை தண்ணீரில் நனைத்து செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் அலுவலர்கள் கூறுகையில், ‘அறங்காவலர் குழு ஏற்பாட்டில், இத்தகைய வசதி செய்துள்ளோம். பக்தர்கள் வெளியே இருந்து வரும் போது, பாதங்களை தண்ணீரில் நனைத்து உள்ளே வரும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு பக்தர் வரும் கோவில்களில், நோய் தொற்று பரவலை தடுக்க இத்தகைய வசதி செய்வது வழக்கம். இதேபோல், வீரராகவப்பெருமாள் கோவிலிலும் அமைக்கப்பட உள்ளது,’ என்றனர்.