கருமத்தம்பட்டி; கிருஷ்ண் ஜெயந்தி விழாவை ஒட்டி, சிறுவர் சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து உற்சாகமடைந்தனர்.
கருமத்தம்பட்டி அடுத்த வினோபா நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த சிறுவர், சிறுமியர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ராஜ கணபதி கோவிலில், கிருஷ்ணருக்கு வழிபாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சிறுவர், சிறுமியர் நடனமாடி அனைவரின் பாராட்டுதல்களை பெற்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இளைஞர்கள் செய்திருந்தனர். தேவராயன்பாளையத்தில், ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணர் வேடமணிந்து குழந்தைகள் உறியடித்து விளையாடினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.