திருமலை ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2024 06:08
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடந்தது. திருமலை ஏழுமலையான் கோவில் தங்கவாசல் அருகே, ஸ்ரீதேவி பூதேவி மலையப்ப சுவாமியை எழுந்தருள செய்து, உற்சவமூர்த்திகளுக்கு, சிறப்பு ஆஸ்தானம் நடந்தது. திருமலையில், கோகர்பம் நீர்தேக்கம் அருகேயுள்ள காளிங்கநர்த்தன கிருஷ்ணர் சிலைக்கு, தேவஸ்தானம் சார்பில், அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. அதேபோல், திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையில் உள்ள கிருஷ்ணர் கோவில் மற்றும் இஸ்கான் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.