பதிவு செய்த நாள்
30
ஆக
2024
05:08
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், ஓம்சக்தி, பராசக்தி என்ற பக்தர்கள் கோஷம் முழங்க, மஹா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது.
பொள்ளாச்சியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விசேஷ நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கும்பாபிஷேகம் நடந்து, 22 ஆண்டுகள் ஆகிய நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த, 28ம் தேதி மஹா கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக துவக்கம், பிம்பசுத்தி, காலை, 8:30 மணிக்கு பத்ரகாளியம்மன் விமான கோபுரம், பரிவார விமானங்கள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன. அப்போது, பக்தர்கள், ஓம் சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பி வணங்கினர். எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். காலை, 8:45 மணிக்கு மேல், 9:15 மணிக்குள் விநாயகர் முதற்கொண்டு அனைத்து பரிவாரங்கள் மற்றும் அன்னை பத்ரகாளியம்மன் மூலாலய மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு மஹா அபிஷேகம், விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நாளை முதல், 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது.