Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ... சீரடி சாய்பாபாவிற்கு செங்கோல் சமர்ப்பித்து பக்தர்கள் வழிபாடு சீரடி சாய்பாபாவிற்கு செங்கோல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் ஆவணி திருவிழா; சிவப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சண்முகர் வீதி உலா
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் ஆவணி திருவிழா; சிவப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சண்முகர் வீதி உலா

பதிவு செய்த நாள்

30 ஆக
2024
05:08

திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆவணி திருவிழாவில் இன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில், வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். 


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 6ம் நாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளிஅம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி, உள் மாடவீதிகள் மற்றும் ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழாம் திருநாளை முன்னிட்டு, இன்று அதிகாலை 5:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள், கடக லக்கனத்தில் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, 8:45 மணியளவில் ஆறுமுகநயினார் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பக்த பெருமக்களுக்கு வாழ்வில் வெற்றியையும் ஏற்றத்தை தரும் ஏற்ற தரிசனம் கொடுத்து, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் சுவாமி சண்முகப்பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி சிவன் அம்சத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை (31ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி பிரம்மன் அம்சத்தில் வீதி உலாவும், பகல் 10:30 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் வந்து சேர்க்கையாகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar