திருப்புல்லாணி அகஸ்தியர் தீர்த்தத்தில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2024 07:09
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தியர் தீர்த்தம் கிராமத்தில் உள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த செப்., 4 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. ரக்க்ஷா பந்தன், கும்பஸ்தானம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பின்னர் நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:30 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் திருப்புல்லாணி சபரிநாதன் ரங்கநாதன் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேதுக்கரை அகஸ்தியர் தீர்த்தம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.