காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதியில், யதுகுல வேணுகோபால சுவாமி பஜனை கோவில் கண்ணன் அவதார விழா கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை 8:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு சொற்பொழிவும், இரவு 8:00 மணிக்கு வேணுகோபால சுவாமி பலவித அலங்காரத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதில், ஒன்பதாம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு, சூரிய பிரபையில் எழுந்தருளிய வேணுகோபால சுவாமி முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். இன்று காலை உறியடி உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை யகுதுல வேணுகோபால பஜனை மந்திரம் நிர்வாக்குழு மற்றும் விழாகுழுவினர் செய்துள்ளனர்.