சுந்தராபுரம் கம்பீர விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2024 05:09
கோவை ; விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -01 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் மூலவர் விநாயக பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.இதன் மூன்று நாள் நிகழ்வாக கடந்த 05-09-2024 அன்று விக்னேஸ்வர பூஜை, முகூர்த்தக்கால் நடுதல், வாஸ்து சாந்தி, பிரவேசபலி காலை ஏழு முப்பது மணி அளவில் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கொடியேற்றும் நிகழ்வு,அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 5 மணி அளவில் கணபதி ஹோமம், கணபதி மூல மந்திர ஜபம், அதை தொடர்ந்து பூர்ணாஹூதி, மகா தீபாரதனை நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் மகா அபிஷேகமும் மகா தீபாத னையும் நடைபெற்றது. இரண்டாம் நாள் 06 - 0 9 -2024 வெள்ளிகிழமை அன்று மாலை 5 மணி அளவில்சிறப்பு பூஜை நடைபெற்றது.மூன்றாம் நாள்சனிக்கிழமை விநாயக சதுர்த்தி தினத்தன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் 6 மணிக்கு மகா அபிஷேகம் 7 - 30 மணி அளவில் சிறப்பு பூஜை, மோதக அர்ச்சனை | அருகம்புல் அர்ச்சனை, ஆகியன நடந்தன. இதை தொடர்ந்து விநாயக பெருமான் வெள்ளி காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றனர்.