117 ஆண்டுக்குப் பிறகு அம்பலவாணர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2024 03:09
திருநெல்வேலி; கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்த மானுார் அம்பலவாணர் சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கருவூர் சித்தர் ஒரு முறை நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தார். கோவில் வாசலில் நின்றபடி நெல்லையப்பா... நெல்லையப்பா... என அழைத்தார். நெல்லையப்பர் செவி சாய்க்கவில்லை. எனவே கருவூர் சித்தர் எருக்கும் குறுக்கும் எழுக.. என சாபமிட்டபடி மானுார் நோக்கி நடந்து சென்றார். மானுார் அம்பலவாணர் சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் ஜோதி வடிவில் காட்சி தந்தார். அதன் பின்னர் கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோவில் வந்து எறுக்கும் குறுக்கும் அறுக... என சாப விமோசனம் தந்தார். அத்தகைய புராண நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலதிருவிழாவில் நடக்கிறது. நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளும் சந்திரசேகரராகவும் பவானி அம்பாளாகவும் மானுார் வருகை தருவார்கள். கோவிலில், 1913ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது 111 ஆண்டுகளுக்குப் பின், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.