பதிவு செய்த நாள்
08
செப்
2024
06:09
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜை, விஸ்வரூபம், கோ பூஜை, பூர்ணா ஹூதி, கும்ப புறப்பாடு நடந்தது பின்னர் காலை 7:35 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளை சுந்தரராஜ பட்டர் தலைமையில் பட்டர்கள் செய்தனர். பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டது. விசேஷத் திருவாராதனம், சாற்றுமுறை, ஆசீர்வாதம், தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவில் எம்.எல்.ஏ. மான் ராஜ், பேரூராட்சி தலைவர் தவமணி, சேது நாராயண பெருமாள் கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் சுந்தரராஜன், சீனிவாசன், ராம்குமார் மற்றும் உறுப்பினர்கள், அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர்கள் லட்சுமணன், கலராணி, ஜோதிலட்சுமி பங்கேற்றனர்.