பதிவு செய்த நாள்
08
செப்
2024
06:09
அவிநாசி; அவிநாசி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜகன்மாதா ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்சன பைரவர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அவிநாசி அடுத்த ராக்கியா பாளையம் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீபுரம் ஜகன்மாதா ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வரன ஆகர்சன பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மஹி கும்பாபிஷேக விழா 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக நேற்று காலை கோவிலில் திசா ஹோமம், நயனோன் மீலினம்,சுவாமிகள் கண் திறக்கும் வைபவமும், கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, ஒட்டக பூஜை, பைரவ பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளை சிவாகம சர்வசாதக சரபர் சிவஸ்ரீ சபேச சிவாச்சாரியார் தலைமையில்,கும்பகோணம் சிவாகம சிவஸ்ரீ முனைவர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் திருக்கோவிலின் அமைப்பின் சிறப்புகளையும் பூஜைகளையும் பற்றி கூறினார். அதனைத் தொடர்ந்து சாந்தி கோம்பத்துடன் பூஜையில் நிறைவடைந்தது இந்நிகழ்ச்சியில் திருப்பூர் சாரதா சத்சங்கம் மஹாத்மானந்த சரஸ்வதி,ஜகன் மாதா ஸ்ரீ இராஜராஜேஸ்வரி டிரஸ்ட் தலைவர் ஞானகுரு, கோவிலின் ஸ்தபதி செல்வராஜ், சிற்பி தீபக், கும்பாபிஷேக விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.