கொங்கம்பட்டு 13 அடி உயர முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2024 03:09
கண்டமங்கலம்; கண்டமங்கலம் அடுத்த கொங்கம்பட்டு மலட்டாறு அருகே உள்ள முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 6ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. அன்று இரவு 8:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. காலை 7:45 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி விநாயகர், வள்ளிதேவசேனா அம்பிகா சமேத சுப்ரமணிய சுவாமி, நவகிரகங்கள், விஸ்வரூப 13 அடி உயர முருகன் சிலை, பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் இடும்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 8:30 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பல்வேறு கிராமங்காளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.