பதிவு செய்த நாள்
20
நவ
2012
12:11
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி விழாவையொட்டி, சுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இங்குள்ள காசிவிஸ்வநாதர் கோயில் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், சஷ்டி விழாவின் ஏழாம் நாளான நேற்று, சுவாமி, தேவி திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சுவாமி மணக்கோலத்தில் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள, அவரை பின்தொடர்ந்து தேவியர் இருவரும், ஒருவர் பின் ஒருவராக மண்டப ஊஞ்சலில் எழுந்தருளினர். அக்னி குண்ட யாகம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டபின், சுவாமி தேவியர் இருவரின் கழுத்தில் தாலி அணிவித்தார். பக்தர்கள் அரோகரா கோஷமிட்டனர். பின் மாலை மாற்று வைபம், சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளுக்கு பின் பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றி தரிசனம் செய்தனர். அன்னதானம், தேவியருடன் சுவாமி வீதியுலா நடந்தது.