பதிவு செய்த நாள்
20
நவ
2012
01:11
திருத்துறைப்பூண்டி: பிறவி மருந்தீஸர் கோவிலில் சஷ்டியையொட்டி, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸர் கோவிலில், சஷ்டியையொட்டி நேற்று முன்தினம் காலை அகமுடையார் சங்கத்தின் சார்பில், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணியர், வள்ளி தெய்வானைக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது.பின்னர், சுப்பிரமணியர் ஸ்வாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி, மேலவீதியில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இரவில் சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானையுடன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஏற்பாட்டை ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயராமன், நாடிமுத்து மற்றும் அகமுடையார் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.