பதிவு செய்த நாள்
20
நவ
2012
01:11
பெருந்துறை: பெருந்துறை, ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, நவம்பர், 22ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, 20ம் தேதி இரவு, 8 மணியளவில் தீத்தாம்பாளையத்திலிருந்து முப்பாட்டு விளக்கு கொண்டு வருதல், குதிரை பிடித்து எல்லைமேடு சென்று அம்மை அழைத்தல், 21ம் தேதி காலை, 6 மணியளவில் அபிஷேக ஆராதனை நடக்கிறது. நவம்பர், 22ம் தேதி, 12 மணியளவில் திருக்காவடி தீபம் ஏற்றுதல், மதியம், ஒரு மணியளவில், பொங்கல் விழா, இரவு, 8 மணியளவில் காப்பு களைதல். 23ம் தேதி மாலை, 5 மணியளவில் நாதஸ்வர, தவில் இசை நிகழ்ச்சி, மாலை, 6 மணியளவில் அம்மன் முத்துப் பல்லக்கில் திருவீதி உலா புறப்படுதல் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் அருள்குமார், செயல் அலுவலர் (பொறுப்பு) சுகுமார் மற்றும் பக்தர்கள்செய்து வருகின்றனர்.