கும்பகோணம்: சுவாமிமலையில், 200 ஆண்டு பழமைவாய்ந்த அய்யனார் கோவிலில் திருப்பணி செய்வதற்கான பாலாலய விழா நடந்தது.கிராம தேவதை கோவிலான பூர்ண புஷ்கலா அம்பிகை சமேத அய்யனார் கோவில், சுவாமிநாத ஸ்வாமி கோவிலின் நிர்வாகத்தில் பராமரிக்கப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் அய்யனார் கோவிலின் பழமை காரணமாக, திருப்பணி வேலைகள் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, புனித நீர் நிரப்பிய குடங்களுக்கு பூஜை நடந்தது. பூர்ணாகுதி தீபாராதனை செய்யப்பட்டு, ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். கோவில் துணை கமிஷனர் கஜேந்திரன், கண்காணிப்பாளர் செல்வம் மற்றும் உபயதாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.