இறைவன் இப்படித்தான் இருப்பார் என்று வடிவமைத்தவர் யார்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2012 05:11
இறைவனுக்கு வடிவமோ, பெயரோ கிடையாது. ஆத்மசக்தி நிறைந்த ஞானியருக்கு ஏற்பட்ட அருட்காட்சிகளே இறை வடிவங்கள். ஆனால், எல்லா வடிவங்களும் உண்மையானவையே. எதில் மனம் லயிக்கிறதோ அதை வழிபட்டு வந்தாலும் பலன் ஒன்றே. பசித்தவனுக்கு உணவு தேவை என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்த உணவை சாப்பிட்டால் தான் பசியடங்கும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.