திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர். குலம் தழைத்து தம்பதியர் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பது தான் அதன் நோக்கம். அதற்குரிய அம்சங்களை திருமணப்பொருத்தம் என்று முறைப்படுத்தி வகுத்தனர் முன்னோர். ஜோதிடத்தில் கைதேர்ந்தவர்களால் கணிக்கப்படும் பொருத்தம் சரியாக இருக்கும். ஜாதகம் இருந்தால் பொருத்தம் பார்ப்பது முறை. ஜாதகம் இல்லாவிட்டால் திருவுளச்சீட்டு முறையைப் பின்பற்றலாம்.