பதிவு செய்த நாள்
15
செப்
2024
06:09
செஞ்சி; செவலபுரை அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி அடுத்த செவலபுரை பிரகன்நாயகி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து பிரகன் நாயகி சமேத அகஸ்தீஸ்வரர், விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சண்முகர், பைரவர், நவகிரகங்களுக்கு நேற்று ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 12ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, நவகிரக ஹோமம், விக்ரகங்கள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. 13ம் தனபூஜை, அஷ்டலட்சுமி ஹோமம், யாகசாலை நிர்மானம், விமான கலச பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம், கும்பாலங்காரம், முதற்கால யாக பூஜைகள் நடந்தது. 14ம் தேதி விசேஷ சந்தி, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன சமர்ப்பணம் ஆகியன நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 6.30 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும், 7 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும் 8.00 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.