வனப்பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2024 12:09
கடலாடி; கடலாடி அருகே சமத்துவபுரம் செல்லும் வழியில் வனப்பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் வனப்பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன் உள்ளிட்ட பூர்ண புஷ்பகலா சமேத கொண்டன அய்யனார், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, சோனை கருப்பண்ணசாமி, பைரவர், வீரபத்திரர் மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜகர் பிரேம்குமார் பூஜைகளை செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.