திருப்பதிக்கு பாத யாத்திரை; பக்தர்கள் விரதம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2024 12:09
புதுச்சேரி; திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் மாலை அணியும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சிற்றம்பலம், டி.பி.ஆர்., திருமண மண்டபத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு வரும், அக்.,6,ம் தேதி, வெங்கடேச பெருமாள் பக்த ஜனசபா குழுவினர், 32வது ஆண்டாக பாத யாத்திரை புறப்பட உள்ளனர். இதையொட்டி, புதுச்சேரி, பாரதி பூங்கா, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று பக்த ஜன சபா தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.