சின்னசேலம்; சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ–பூஜை விழா நடந்தது. சின்னசேலம் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு கோ மாதாவிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோ மாதாவிற்கு மஞ்சள், குங்குமம், பல வண்ண மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்தனர். விக்னேஷ்வர பூஜை, அஷ்டலஷ்மி பூஜைகளுக்குப்பின் மந்திரங்களை ஓதி மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழிபாடுகளை சர்மா பரத் குழுவினர் செய்திருந்தனர். ஆர்ய வைசிய மகிளா விபாக், வாசவி வனிதா கிளப் உள்ளிட்ட ஆர்ய வைசிய சமூக பெண்கள் கோ பூஜையில் கலந்துகொண்டு ஆசி பெற்றனர்.