சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முகூர்த்தக்கால் நடுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2024 11:09
சிவகங்கை; சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நட்டு துவக்கி வைத்தனர்.
சிவகங்கையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சனி வார விழா நடைபெறும். ஒவ்வொரு வாரமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். சனி தோறும் இரவு சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இச்சிறப்பு பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:15 மணிக்கு சுந்தரராஜ பெருமாள், கருப்பர், ஆஞ்சநேயர், சவுமிய நாராயண பெருமாள், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றது. கோயில் முன்பாக முகூர்த்த கால் நட்டு வைத்து புரட்டாசி விழாவை துவக்கி வைத்தனர். கோயில் செயல் அலுவலர் நாராயணி தலைமையில் அலுவலர் கோபி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோயில் பட்டாச்சார்யார்முத்துக்கிருஷ்ணன், கோபால கிருஷ்ணன் சிறப்பு பூஜைகளை செய்தனர்.