குருவாயூர் கிருஷ்ணா கோவில் மேல்சாந்தியாக ஸ்ரீஜித் நம்பூதிரி தேர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2024 01:09
பாலக்காடு; குருவாயூர் கோவில் மேல்சாந்தியாக ஸ்ரீஜித் நம்பூதிரியை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணா கோவில். இங்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு நடப்பது வழக்கம். அக்டோபர் மாதம் முதல் ஆறு மாதத்திற்கான மேல்சாந்தி தேர்வு நேற்று கோவில் நமஸ்கார மண்டபத்தில் நடந்தது. தேவஸ்தான நிர்வாக குழு முன் நடந்த நேர்முகத் தேர்வில் தகுதி பெற்ற 42 விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் திருச்சூர் மாவட்டம் வெள்ளறக்காடு தோன்னல்லூர் புதுமனை இல்லத்து ஸ்ரீஜித் நம்பூதிரியை 36, தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவில் தந்திரி தினேசன் நம்பூதிரிப்பாடு, தற்போதைய மேல்சாந்தி மதுசூதனன் நம்பூதிரி, தேவஸ்தானம் நிர்வாக குழு தலைவர் விஜயன், நிர்வாக குழு உறுப்பினர்களான பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, மனோஜ், ரவீந்திரன், நிர்வாகி வினயன் ஆகியோரின் இருப்பில் தேர்வு நடந்தன. ஸ்ரீஜித் நம்பூதிரி கடந்த 16 வருடமாக வேலூர் குறூரம்ம கிருஷ்ணர் கோவிலில் மேலசாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.