பதிவு செய்த நாள்
21
நவ
2012
11:11
கும்பகோணம்: ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை சோமவாரம் என்றழைக்கப்படுகிறது. கும்பகோணம் அருகே திருபுவனத்தில் வசிக்கும் சவுராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பால் காவடி எடுத்து கொண்டு, பாத யாத்திரையாக சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். அந்த வகையில் நேற்று திருபுவனத்தில் இருந்து குழந்தைகள் முதல், பெண்கள் உட்பட பெரியவர்கள் வரை, 300 பேர் பால் காவடி எடுத்து சென்றனர். அம்மாசத்திரம், புளியம்பேட்டை, செட்டிமண்டபம், நால்ரோடு, பிடாரி குளம் ரோடு, நாகேஸ்வரன் வடக்கு, தஞ்சை சாலை, கும்பேஸ்வரன் கோவில் தெற்கு, தாராசுரம், வலையப்பேட்டை மாங்குடி வழியாக சுவாமிமலையை சென்றடைந்தனர். அங்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தும், தீபங்கள் ஏற்றியும் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.