கோலாரின் கோடி லிங்கேஸ்வரா ஊர்தி மைசூரின் ஜம்பு சவாரியில் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2024 11:10
கோலார்; இம்மாதம் 12ம் தேதி நடக்கவுள்ள, மைசூரின் தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க, கோலாரின் கோடி லிங்கேஸ்வரா கோவில் ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா, நேற்று அளித்த பேட்டி: மைசூரின் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க, கோலாரின் கோடி லிங்கேஸ்வரா கோவில் ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க, கோலார் மாவட்ட தொழில் துறை துணை இயக்குனர் ரவிச்சந்திரா தலைமையிலான குழுவினர், கோலாரின் கோடி லிங்கேஸ்வரா கோவில், சோமேஸ்வரா கோவில், முல்பாகலின் குருடுமலே கணபதி கோவில் ஊர்திகள், அமைச்சர் மஹாதேவப்பா தலைமையிலான தசரா தேர்வு கமிட்டி முன்பாக வைக்கப்பட்டது. இவற்றில் கோடி லிங்கேஸ்வரா ஊர்தி தேர்வு செய்யப்பட்டது. இந்த கோவில் ஊர்தி, விஜயதசமி ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும். ஊர்தி வடிவமைக்க டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.