வளர்பிறை பஞ்சமி; வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2024 11:10
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி திதியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வாராகி அம்மனை பஞ்சமியில் வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. வளர்பிறை பஞ்சமியான இன்று ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.