திருவண்ணாமலை; பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பச்சையம்மன் அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது, விழாவின் நான்காம் நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பச்சையம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.