வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் மகா மாரியம்மன், சக்தி விநாயகர், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. குளித்தலை வரதராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் ராஜா தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.