விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2024 08:10
விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில் 13 லட்சத்து 43 ஆயிரத்து 79 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியல் திறந்து நேற்று காணிக்கை எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை கடலுார் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் சரக ஆய்வாளர் கோவிந்தசாமி, செயல் அலுவலர் மாலா உட்பட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அதில், 13 லட்சத்து 43 ஆயிரத்து 79 ரூபாய் ரொக்கம், 1.500 கிராம் தங்கம், 80 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன.